×

மகா சிவராத்திரியையொட்டி குலதெய்வ கோயில்களில் பக்தர்கள் குவிந்தனர்

தொண்டி, மார்ச் 9: குலதெய்வ வழிபாடு என்பது ஆண்டுதோறும் மாசி மாத மகா சிவராத்திரியன்று அனைத்து குடும்பத்தினரும் சேர்ந்து நடத்தும் ஒரு வழிபாடு ஆகும். அதன்படி நேற்று மகா சிவராத்திரியையொட்டி தொண்டி, நம்புதாளை பகுதிகளில் உள்ள அனைத்து சிவன் கோயில்கள் மற்றும் குலதெய்வ கோயில்களில் விடிய, விடிய சிவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நம்புதாளையில் உள்ள பதினெட்டாம் படி கருப்பர் கோயிலில் தரிசனம் செய்ய உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டம், வெளிமாநிலகளிலிருந்து பக்தர்கள் வந்திருந்தனர். இதே போல் முகிழ்த்தகம் திருவெற்றியூர் உள்ளிட்ட கிராமங்களில் அய்யனார், காளியம்மன் கோயில்களிலும் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது: வருடத்திற்கு ஒரு முறை குலதெய்வத்தை அனைவரும் சேர்ந்து கும்பிடுவது வழக்கம். எந்த குறை இருந்தாலும் குல தெய்வ குறை இருக்க கூடாது என்பதற்காக இந்த வழிபாடு நடைபெறுகிறது. எந்த ஊரில் இருந்தாலும் அவரவர் குலதெய்வம் இருக்கும் கிராமங்களுக்கு சென்று வழிபடுவது கூடுதல் சிறப்பு. இவ்வாறு கூறினர்.

The post மகா சிவராத்திரியையொட்டி குலதெய்வ கோயில்களில் பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Tags : Maha Shivratri ,Thondi ,Kula Deiva Puddha ,Shiva ,Nambuthalai ,
× RELATED ஊராட்சிகள் எல்லை அளவீடு